/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரூ.3.36 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டும் பணி
/
ரூ.3.36 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டும் பணி
ADDED : அக் 29, 2024 01:22 AM
ரூ.3.36 கோடி மதிப்பில்
புதிய கட்டடம் கட்டும் பணி
தர்மபுரி, அக். 29-
தர்மபுரி அடுத்த, செட்டிக்கரையில் இந்தியன் வங்கியின் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்திற்கு, 3.36 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டும் பணிக்கு, மாவட்ட கலெக்டர் சாந்தி நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், 1 முதல், 5- ம் வகுப்பு வரை கற்பிக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் குறித்து நடந்த, ஒன்றிய அளவிலான பயிற்சியை பார்வையிட்டு, ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.
இதில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குனர் லலிதா, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் பத்மாவதி, துணை மண்டல மேலாளர் பீரேந்திர குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராமஜெயம், தர்மபுரி ஒன்றிய சேர்மன் செல்வம் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

