/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கிணற்றில் விழுந்த கட்டட மேஸ்திரி சாவு
/
கிணற்றில் விழுந்த கட்டட மேஸ்திரி சாவு
ADDED : ஜூன் 21, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அதியமான்கோட்டை, திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த, எஸ்.கோடியூரை சேர்ந்த கட்டட மேஸ்திரி மணிவேல். 30.
இவர் தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த கோம்பேரி பகுதியில் உள்ள அவரது அக்கா நந்தினி, 33, வீட்டில் தங்கியபடி, ஓசூரில் மேஸ்திரி வேலை செய்து வந்தார்.
கடந்த, 18 அன்று காலை, 10:00 மணிக்கு கோம்பேரியில் உள்ள கிணற்றின் அருகில் இருந்த மணிவேல் மாயமான நிலையில், கிணற்றில் இருந்த தண்ணீரை மோட்டார் மூலம் வடித்து பார்த்தபோது, மணிவேல் சடலமாக இருந்தார். உடனடியாக, தீயணைப்பு துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.