/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
டூவீலர்கள் மோதல் கட்டட மேஸ்திரி பலி
/
டூவீலர்கள் மோதல் கட்டட மேஸ்திரி பலி
ADDED : ஜூலை 11, 2025 01:38 AM
பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் அடுத்த லிங்கநாய்க்கனஹள்ளியை சேர்ந்த கட்டட மேஸ்திரிகள் கவுதம், 23, பிரதீப், 30. நேற்று முன்தினம் மாலை கவுதம் தன் பல்சர் பைக்கில், பிரதீப்புடன் கடத்துாரில் இருந்து வீட்டுக்கு சென்றார். கடத்துார் அரசு மாணவர் விடுதி அருகே முன்னால் சென்ற அரசு பஸ்சை முந்தி சென்றார்.
அப்போது எதிரே வந்த ஜூபிடர் ஸ்கூட்டி மீது பைக் மோதியது. இதில் இரு வாகனங்களும் கீழே விழுந்தன. அவற்றின் மீது பஸ் மோதாமல் இருக்க, பஸ் டிரைவர் பாலு, 50. பஸ்சை திருப்பியதால், அருகிலுள்ள வயலில் பஸ் இறங்கியது.
விபத்தில் கவுதம், பிரதீப், ஸ்கூட்டியில் வந்த பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த தங்கராஜ், 34, ஆகிய மூவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், கவுதம் உயிரிழந்தார். கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.