sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ கட்டட தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கட்டட தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கட்டட தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 24, 2026 10:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 10:18 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தமிழ் மாநில மக்கள் கட்டட தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் பேரவையினர், கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செயலாளர் மாது தலைமை வகித்தார். மாநில பொருளாளர் கிஷோர், மாநில இணை செயலாளர் அசோக் உட்பட பலர் பேசினர்.

இதில், அமைப்புசாரா நலவாரியத்தில் கடந்த, 4 மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படாமல், நிலுவை உள்ளதை உடனே வழங்க வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தனித்துறை உருவாக்க வேண்டும். நலவாரியத்தின் நிலையான தீர்வுக்கு எஸ்.ஓ.பி., நடைமுறையை உடனே அமல்படுத்த வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்ய வி.ஏ.ஓ., சான்றிதழ் வேண்டும் என்பதை ரத்து செய்ய வேண்டும்.

நலவாரியத்தில், பதிவு செய்தவருக்கு தொழிற்சங்கங்களுக்கான தனி 'ஐடி' உருவாக்க வேண்டும். நலவாரியத்தில் பதிவுசெய்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக, 5,000 ரூபாய் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us