/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கட்டட தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
கட்டட தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 10, 2025 10:18 AM
தர்மபுரி: தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி., கட்டட தொழிலாளர்கள் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று ஆர்ப்-பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் குழந்தைவேலு தலைமை வகித்தார். நிர்வாகிகள் சண்முகம், ராஜி, பாலகி-ருஷ்ணன், விஜயா ஆகியோர் முன்னிலை வகித்-தனர். மாவட்ட செயலாளர் மணி கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில், கட்டட தொழிலாளர்-களின் ஓய்வூதியம், 6,000 ரூபாய் என்பதை சட்ட-மாக்க வேண்டும்.
விண்ணப்பித்த அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும். வீடு கட்டும் மானிய தொகை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். பொங்கல் போனஸ், 5,000 ரூபாய் வழங்க வேண்டும். நலவா-ரிய வரியை, 3 சதவிகிதமாக உயர்த்தி வசூல் செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

