/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நுகர்வோர் விழிப்புணர்வு உரிமை பாதுகாப்பு பேரணி
/
நுகர்வோர் விழிப்புணர்வு உரிமை பாதுகாப்பு பேரணி
ADDED : நவ 09, 2024 03:48 AM
தர்மபுரி: தர்மபுரியில், மாவட்ட நிர்வாகம், நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து துவங்கிய பேரணியை டி.ஆர்.ஓ., கவிதா கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில், நுகர்வோர் பயன்பாடு குறித்தும், தரமான பொருட்கள், சரியான எடை அளவு, கலப்படமற்ற பொருட்கள் வாங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், கலப்படம் கண்டறிதல், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தல் மற்றும் போதை வஸ்துக்கள், புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி மாணவ, மாணவிகள் பேரணியாக சென்றனர்.செந்தில் நகர், இலக்கியம்பட்டி, பாரதிபுரம் வரை சென்று மீண்டும் கலெக்டர் அலுவலகத்தை பேரணி வந்தடைந்தது. தர்மபுரி மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் சிவனேசன், நகர பிரதிநிதிகள் பாஸ்கரன், எழிலரசு உள்பட பலர் பங்கேற்றனர்.