ADDED : ஆக 19, 2026 05:30 AM

அ நிறம் | அளவு
அரூர்:தர்மபுரி
மாவட்டம், அரூர் அடுத்த, தீர்த்தமலையில் தீர்த்தகிரீஸ்வரர் கோவில்
உள்ளது. இங்குள்ள ராமர், குமாரர் உள்ளிட்ட தீர்த்தங்களில் புனித
நீராட, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில்
இருந்து, தினமும், 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் சுற்றுலா
பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், உடை மாற்றும் அறை
அசுத்தமாக உள்ளதுடன், துர்நாற்றம் வீசுவதால், நீராடி விட்டு வரும்,
பெண் பக்தர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, உடை
மாற்றும் அறையை சுகாதாரமாக பராமரிக்க, கோவில் நிர்வாகம் நடவடிக்கை
எடுக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
