ADDED : ஆக 19, 2026 05:29 AM
தர்மபுரி:தர்மபுரி
மாவட்டம், பாலக்கோடு பஸ் ஸ்டாண்டில் நேற்று முன்தினம், மா.கம்யூ.,
சார்பில், தனியார் பஸ்களில் கட்டண உயர்வை கண்டித்து, தனியார் பஸ்சை
சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனுமதி யின்றி
போக்குவரத்திற்கு இடையூராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக,
மா.கம்யூ., வட்டகுழு செயலாளர் கார்ல் மார்க்ஸ் உட்பட, 38 பேர் மீது,
பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.
அதேபோல், கர்நாடக
மாநிலத்தில் தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்டதை கண்டித்து, தர்மபுரி
மாவட்டம், பாளையம் சுங்கச்சாவடி பகுதியில், தனியார் பஸ்சை நிறுத்தி,
த.வா.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உரிய அனுமதியின்றி
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, த.வா.க., மாநில துணைப்
பொதுச்செயலாளர் தவமணி உட்பட, 27 பேர் மீது, தொப்பூர் போலீசார்
வழக்குப்பதிந்துள்ளனர்.
