தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம்

ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம்

ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம்


ADDED : ஜூலை 21, 2026 06:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 21, 2026 06:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்; தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் மற்றும் ஒப்-பந்த தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், தர்மபுரி மாவட்டம், அரூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது. மாநில துணைச் செயலாளர் சத்தியராஜ் தலைமை வகித்தார்.

போராட்டத்தில், 'தமிழ்நாடு மின்வாரியத்தில், 70,000 காலி பணியிடங்கள் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த, 5 முதல், 20 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும். 1998 ஜன., 1 முதல், 2008 வரை விடுபட்ட பி.சி.பி., - சி.எச்.ஐ.டி.டி.யு., மற்றும் ஏ.இ., சான்றிதழ் வைத்துள்ள ஊழியர்-களை அடையாளம் கண்டு நேரடி நியமனம் வழங்க வேண்டும். ஐ.எல்.ஓ., வழக்கில் வெற்றி பெற்று பணி ஆணை வைத்திருக்கும், 6,788 நபர்க-ளுக்கு நிலுவை தொகையுடன் பணி ஆணை வழங்க வேண்டும். கே2 ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் அனைத்து அனல் மின் மற்றும் நீர்மின் உற்பத்தி நிலைய ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us