ADDED : ஜூலை 21, 2026 06:15 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி; தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சப்- இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் உள்ளிட்ட போலீசார் பாஞ்சாலி நகர் பகுதியில் நேற்று முன்தினம் மாலை, 6:30 மணியளவில் கண்கா-ணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அப் பகு-தியில் உள்ள சந்திரமவுலி வீட்டில், உள்ளே வெளியே சூதாட்டத்தில் சிலர் ஈடுபட்டிருந்தனர். பூதநத்தம் பகுதியை சேர்ந்த, தி.மு.க., மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தாமோதரன்,
பாப்பிரெட்டிப்பட்டி மாயா பஜார் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்,46, இருளப்பட்டியை சேர்ந்த அறி-வுக்கரசு,61, கூக்கடப்பட்டியை சேர்ந்த வெங்க-டேசன்,47, பெரியசாமி,69, உள்ளிட்ட, 5 பேரை பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து, 3,000 ரூபாய் பறிமுதல் செய்தனர்.
