/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் கோரி மறியல்
/
ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் கோரி மறியல்
ADDED : செப் 24, 2025 01:54 AM
தர்மபுரி :தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில், தர்மபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், நேற்று மறியல் போராட்டம் நடந்தது.
சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர், லெனின் மகேந்திரன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் விஜயன் உட்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு, நிர்வாகமே நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும். தடை செய்யப்பட்ட, 19 இடங்களில் பணிசெய்யும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
பொதுத்துறை நிறுவனங்களில், 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற, தி.மு.க., அரசின் தேர்தல் வாக்குறுதி, 153ஐ நிறைவேற்ற வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியலில் ஈடுபட்டனர். மறியல் செய்த, 170 பேரை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.