/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கம் காலவரையற்ற போராட்டம்
/
கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கம் காலவரையற்ற போராட்டம்
கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கம் காலவரையற்ற போராட்டம்
கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கம் காலவரையற்ற போராட்டம்
ADDED : அக் 08, 2025 01:40 AM
அரூர், அரூரில், தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது. அரூர் நான்குரோட்டிலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி முன் நடந்த போராட்டத்திற்கு, அரூர் வட்ட செயலாளர் மாது தலைமை வகித்தார். வட்டத்தலைவர் ஞானமூர்த்தி, பொருளாளர் செல்வம், மாவட்ட இணை செயலாளர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட போராட்டக்குழு தலைவர் ஸ்டாலின் மணிக்குமார் பேசினார்.போராட்டத்தில், ஊதிய உயர்வு வெளிப்படை தன்மையுடன், சங்கங்களை வகைப்பாடு செய்யாமல், லாப நட்டங்களை கணக்கில் கொள்ளாமல், 2018 மார்ச், 31ம் தேதி ஊதிய ஒப்பந்தத்தை அடிப்படையாக கொண்டு பணியாளர்கள், 2023 மார்ச், 31ம் தேதி பெற்று வந்த சம்பளத்தின் மீது, 20 சதவீத ஊதிய உயர்வு, அனைவருக்கும் எவ்வித நிபந்தனையுமின்றி அனுமதிக்கப்பட வேண்டும். 2021ம் ஆண்டுக்கு பின், ஓய்வு பெற்ற பணியாளர்கள் அனைவருக்கும் உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். தேவையற்ற இடங்களில் முதல்வர் மருந்தகம் ஏற்படுத்தி தினமும், 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் நடவடிக்கை கைவிடப்பட வேண்டும் என்பது உட்பட, 25 கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது
.இந்த வேலை நிறுத்தத்தால், அரூர் ஒன்றியத்திலுள்ள, 18 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், 144 ரேஷன் கடைகள் மூடப்பட்டன. அதில் பணிபுரிந்த சங்க பணியாளர்கள் மற்றும் ரேஷன் கடை பணியாளர்கள் என மொத்தம், 250 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால், ரேஷன் கடைகளில் பொது வினியோகம் உள்ளிட்ட பணிகள் முற்றிலும் முடங்கியது.
* பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில், 27 தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில், 184 ரேஷன் கடைகள் உள்ளன. நேற்று முன் தினம் முதல், கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில் தொழிற்சங்க போராட்ட குழு மாவட்ட செயலாளர் ராம்ராஜ் தலைமையில் அனைத்து ரேஷன் கடைகளையும் திறக்காமல் கடையடைப்பு போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.