தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/களப்பணியாளர்களுக்கு ஒருங்கிணைப்பு கூட்டம்

களப்பணியாளர்களுக்கு ஒருங்கிணைப்பு கூட்டம்

களப்பணியாளர்களுக்கு ஒருங்கிணைப்பு கூட்டம்


ADDED : ஜூன் 29, 2026 06:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2026 06:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நல்லம்பள்ளி; தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் வழிகாட்டுதலின்படி, தர்மபுரி மாவட்ட பெண்கள் மேம்பாட்டு சங்கம் இணைந்து, எச்.ஐ.வி.,எய்ட்ஸ் தடுப்பு களப்பணியாளர்களுக்கான ஒருங்கி-ணைப்பு கூட்டம், தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்-ளியில் நேற்று நடந்தது.

தனியார் தொண்டு நிறுவன இயக்குனர் சர-வணன் தலைமை வகித்தார். தர்மபுரி மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க, மாவட்ட மேற்பார்-வையாளர் உலகநாதன் பேசினார். தர்மபுரி மாவட்டத்தை எச்.ஐ.வி., தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.சிறப்பு இலக்கு மூலம், மக்களை அணுகுதல், எச்.ஐ.வி., பரிசோதனை, ஆலோசனை, ஏ.ஆர்.டி., - ஐ.சி.டி.சி., - எஸ்.ஐ.டி., - ஆர்.டி.ஐ., மற்றும் காசநோய் சேவைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

எச்.ஐ.வி., எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த, அனைத்து துறைகளும் ஒருங்கி-ணைந்து செயல்பட வேண்டும் என, தீர்மானிக்கப்-பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us