/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
டிரான்ஸ்பார்மரை உடைத்து காப்பர் காயில் திருட்டு
/
டிரான்ஸ்பார்மரை உடைத்து காப்பர் காயில் திருட்டு
ADDED : டிச 29, 2024 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டிரான்ஸ்பார்மரை உடைத்து
காப்பர் காயில் திருட்டு
பாலக்கோடு, டிச. 29-
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த, மகேந்திரமங்கலத்தில் நேற்று முன்தினம் இரவு மின் இணைப்பை துண்டித்து விட்டு, அப்பகுதியில் இருந்த டிரான்ஸ்பார்மரை உடைத்து, அதிலிருந்த காப்பர் காயில் மற்றும் ஆயிலை திருடி சென்றுள்ளனர். இரவு முழுவதும் மின்சாரம் இன்றி தவித்த மக்கள் டிரான்ஸ்பார்மர் உடைக்கப்பட்டிருந்தது குறித்து, ஜக்கசமுத்திரம் துணை மின் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். மின்வாரிய உதவி இயக்குனர் அளித்த புகார்படி, மகேந்திரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

