/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரூ.68.60 லட்சத்துக்கு அரூரில் பருத்தி ஏலம்
/
ரூ.68.60 லட்சத்துக்கு அரூரில் பருத்தி ஏலம்
ADDED : ஜூலை 22, 2025 02:05 AM
அரூர், அரூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. 236 விவசாயிகள், 510 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், பி.டி., ரகம் குவிண்டால், 7,110 முதல், 8,013 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 510 குவிண்டால் பருத்தி, 44 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
அதேபோல், அரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று இ--நாம் மூலம் பருத்தி ஏலம் நடந்தது. இதில், 140 விவசாயிகள், 300 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், ஆர்.சி.எச்., ரகம் குவிண்டால், 7,519 முதல், 7,979 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 300 குவிண்டால் பருத்தி, 24.60 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.