/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பேரூராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம்
/
பேரூராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம்
ADDED : ஜூலை 01, 2025 01:25 AM
பாப்பிரெட்டிப்பட்டி கடத்துார் பேரூராட்சி அலுவலகத்தில் சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. பேரூராட்சி தலைவர் மணி தலைமை வகித்தார். துணைத்தலைவர் வினோத், செயல் அலுவலர் விஜய் சங்கர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், பேரூராட்சியின், வரவு செலவு கணக்கு, செய்ய வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
* பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் பேரூராட்சி தலைவர் சாந்தி புஷ்பராஜ், தலைமையில் செயல் அலுவலர் முத்து, துணைத்தலைவர் ஸ்ரீதா ஆகியோர் முன்னிலையிலும், பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் தலைவர் மாரி, செயல் அலுவலர் ரவிக்குமார், துணை தலைவர் ரவி ஆகியோர் முன்னிலையிலும் மன்ற கூட்டம் நடந்தது.
* பாலக்கோடு பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டம் பேரூராட்சி தலைவர் முரளி தலைமையில் நடந்தது. இதில் பாலக்கோடு பேரூராட்சியில் செயல்பட்டு வரும், 5 பள்ளிகள் மற்றும், 1, 6, 12, 16 ஆகிய, 4 வார்டுகளில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், கல்கூடப்பட்டியிலுள்ள அங்கன்வாடி மையம் சமையல் கூட மையத்தை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளை நிறைவேற்றி, மாணவர்கள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.