/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நகராட்சி அலுவலகத்தை இடம்மாற்றம் செய்ய கவுன்சிலர்கள் எதிர்ப்பால் கூட்டத்தில் சலசலப்பு

ADDED : நவ 22, 2025 01:28 AM
அரூர், அரூர் நகராட்சி அலுவலகத்தை இடம் மாற்றம் செய்ய, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், நகராட்சி கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டம், அரூர் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் இந்திராணி தலைமை வகித்தார். கமிஷனர் ஹேமலதா முன்னிலை வகித்தார். கூட்டத்தில், தற்போதுள்ள நகராட்சி அலுவலகத்திற்கு போதிய இடவசதி இல்லை. எனவே, நான்குரோடு பகுதியில் நகராட்சி அலுவலகத்தை இடம்மாற்றம் செய்யலாம் என்ற பொருள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதற்கு அ.தி.மு.க., கவுன்சிலர்கள், ' நகராட்சி அலுவலகத்தை இடம் மாற்றம் செய்யக் கூடாது' என, எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின், துாய்மை பணியாளர்களுக்கு சம்பளம் உயர்வு வழங்குவது, நகராட்சி தலைவருக்கு புதிதாக கார் வாங்குவது, அரூர் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால் கூடுதலாக அலுவலர்களை நியமனம் செய்வது, நகராட்சி தலைவர், கமிஷனர் அறைகளுக்கு ஏ.சி., வசதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து, தங்களது வார்டுகளில் தேங்கியுள்ள குப்பையை அகற்றுவது, குடிநீர், சாக்கடை கால்வாய் வசதி, சிமென்ட் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கவுன்சிலர்கள் பேசினர்.