/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தர்மபுரியில் ஓவிய போட்டி
/
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தர்மபுரியில் ஓவிய போட்டி
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தர்மபுரியில் ஓவிய போட்டி
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தர்மபுரியில் ஓவிய போட்டி
ADDED : நவ 22, 2025 01:27 AM
தர்மபுரி, உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, தர்மபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், தர்மபுரி அரசு கலைக்கல்லுாரி கலையரங்கில் நேற்று, மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான ஓவிய போட்டி மற்றும் வண்ணத்திறன் கண்காட்சி நடந்தது.
இதில், 10 வயதிற்கு உட்பட்டோர், 11 முதல், 18 வயதிற்குட்பட்டோர், 18 வயதிற்கு மேற்பட்டோர் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. பங்கேற்ற கண் பார்வை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பிரெய்லி முறையில் ஓவியம் வரை தாள்கள் வழங்கப்பட்டன.
இதில் மாணவர்கள் வண்ணம் தீட்டி தங்களது திறமையை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பிடித்த மாணவர்களுக்கு தலா, 1,000 ரூபாய், 2ம் இடம் பிடித்தவர்களுக்கு தலா, 500 ரூபாய், 3ம் இடம் பிடித்தவர்களுக்கு தலா, 250 ரூபாய் என பரிசு வழங்கப்பட்டது.
முதல் இடம் பிடித்தவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.
தர்மபுரி சி.இ.ஓ., ஜோதிசந்திரா ஓவியப்போட்டியை பார்வையிட்டார். ஏற்பாடுகளை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.