/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நிலத்தை மீட்டு தர கோரி தம்பதி தீக்குளிக்க முயற்சி
/
நிலத்தை மீட்டு தர கோரி தம்பதி தீக்குளிக்க முயற்சி
ADDED : ஜன 28, 2025 06:36 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பொம்முடி அடுத்த பழைய ஒட்டப்பட்டியை சேர்ந்தவர் தசரதன்,47. இவரது மனைவி பாஞ்சாலை, 40. இவர்களுக்கு சொந்தமாக பழைய ஓட்டப்பட்டியில், 85 சென்ட் விவசாய நிலம் இருந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தசரதன் தொப்பூரை சேர்ந்த ஒருவரிடம், 8 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார். இதற்காக தன் நிலத்தை அவரின் பேரில் கிரயம் செய்து வைத்துள்ளார். பணத்தை திருப்பி தரும்போது நிலத்தை தசதரன் பெயருக்கு மாற்றி தருவதாக கடன் கொடுத்தவர் தெரிவித்துள்ளார்.
தசரதன் கடனை திருப்பி செலுத்த சென்றபோது, அவர் பணத்தை வாங்க மறுத்தும், நிலத்தை திரும்ப அவருக்கு ஒப்படைக்காமலும் இருந்துள்ளார். தசரதன் பொம்மிடி போலீஸ் மற்றும் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்துள்ளார். ஆனால் நடவடிக்கை இல்லை. விரக்தியடைந்த தசரதன், நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், மனைவி பாஞ்சாலையுடன் தீக்குளிக்க முயன்றுள்ளார். அங்கிருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அவர்களை தடுத்து மீட்டனர்.

