நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூர் அடுத்த கருத்தம்பட்டியை சேர்ந்தவர் குணசேகரன், 59, விவசாயி; நேற்று முன்தினம் மாலை தன் பசு மாட்டை விவசாய நிலத்தில் கட்டி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு சென்று பார்த்தபோது மாட்டை காணவில்லை. மாம்பட்டியை சேர்ந்த தென்னரசு, 31, என்-பவர், குணசேகரனின் பசு மாட்டை, சரக்கு வாகனத்தில் ஏற்றி போச்சம்பள்ளிசந்தையில் விற்க சென்றுள்ளார். சந்தேகத்தின் படி, போச்சம்-பள்ளி போலீசார் தென்னரசுவை பிடித்து விசாரித்ததில், அவர் மாடு திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அரூர் போலீசார் தென்னர-சுவை கைது செய்தனர்.

