ADDED : நவ 26, 2026 02:32 AM
பென்னாகரம்: பென்னாகரம் வட்டத்திற்கு உட்பட்ட கூத்தப்பாடி, செங்கனுார், கூகுட்டமருத அள்ளி, சக்திநாதபுரம், வட்டுவனஅள்ளி உள்ளிட்ட ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதி, கழிவுநீர் கால்வாய், தெரு விளக்கு மின்கம்பம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மா.கம்யூ. கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், முன்னாள் எம்.எல்.ஏ., டில்லி பாபு, அக்கட்சியின் மாநில குழு உறுப்பினர் குமார், ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம், மாவட்ட குழு உறுப்பினர்கள் ரவி, அன்பு, வளர்மதி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
* பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பூதனத்தத்தம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் பாப்பிரெட்டிப்பட்டி வட்ட, மா.கம்யூ., கட்சி சார்பில் கிளை செயலாளர் சென்ன கிருஷ்ணன் தலைமையில் மக்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வீடற்ற மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு இலவசமாக வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.
