ADDED : நவ 08, 2026 03:28 AM
தர்மபுரி: தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர் திரும்பும் மக்களால், நேற்று தர்மபுரி பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரயில்வே ஸ்டேஷன்களில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.
தர்மபுரி மாவட்டத்தில் இருந்து, 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சேலம், கோவை, ஈரோடு, சென்னை போன்ற வெளி மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கும் வேலைக்கு செல்கின்றனர். இன்று, நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, வேலைக்கு சென்றவர்கள் அனைவரும் கடந்த, 3 தினங்களாக சொந்த ஊர் திரும்பி வந்து கொண்டுள்ளனர். இதனால், தர்மபுரி ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பஸ் ஸ்டாண்ட்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து, பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
தர்மபுரி புறநகர் மற்றும் டவுன் பஸ் ஸ்டாண்ட், ஜவுளி கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. தர்மபுரி டவுன் போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
----------
