ADDED : ஏப் 04, 2026 06:25 AM

அதியமான்கோட்டை; தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் உள்ள மேல் காளியம்மன் கோவில் தேர் திரு-விழா, கடந்த மார்ச், 20 அன்று சுவாமி திருவீதி உலாவுடன் தொடங்கியது. இதில், சுவாமி பாக்கி-யத்திற்கு உட்பட்ட கிராமங்களில், 10 தினங்க-ளுக்கு மேல் திருவீதி உலா நடப்பது வழக்கம். அதைத் தொடர்ந்து, சுவாமி கோவிலுக்கு வந்-தபின், சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை நடக்கும். ஏப்., 10 அன்று மஹாரத தேர் திருவிழா நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவில் அருகே உள்ள குடியி-ருப்புகளில் இருந்து வரும் கழிவு நீர் வெளியேற, வீடுகளை கட்டி விற்பனை செய்த ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் மற்றும் பஞ்., நிர்வாகத்-தினர் முறையான வசதியை ஏற்படுத்தி தர-வில்லை. இதன் காரணமாக, கோவில் தேரோட்டம் நடக்கும் இடத்தில், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும், தேங்கி நிற்கும் கழிவுநீரால் திருத்தேர் சகதியில் சிக்கி கொள்ளும் அபாயம் உள்ளது. எனவே, தேர் திருவிழாவை பாதுகாப்-புடன் நடத்த, பஞ்., நிர்வாகம் கழிவுநீரை முறை-யாக வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.
