/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தரமற்ற பணியால் ஒரே மாதத்தில் சேதமான தார்ச்சாலை
/
தரமற்ற பணியால் ஒரே மாதத்தில் சேதமான தார்ச்சாலை
ADDED : பிப் 17, 2025 02:52 AM
நல்லம்பள்ளி: நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்பட்ட தரமற்ற பணியால், ஒரே மாதத்தில் தார்ச்சாலை சேதமானதால், வாகன ஓட்டிகள் அவதிய-டைந்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே, குடிபட்டி பிரிவு சாலை முதல் சேவன்கொட்டாய் வரை, 3.40 கி.மீ., நெடுஞ்சா-லையை ஒருங்கிணைந்த சாலை மேம்பாடு திட்டத்தில், 3.50 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்யும் பணிக்கு நிதி ஒதுக்-கீடு செய்யப்பட்டது. அதை தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் கடந்தாண்டு ஜன., 16 அன்று பூமி பூஜை செய்து, தொடங்கி வைத்தார். சாலை பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், நல்லம்பள்ளி அருகே, குடிபட்டி பிரிவு சாலையில், பழைய சாலையை சுரண்டி எடுக்காமல், அதன் மேலேயே புதிய தார்ச்சாலை கடந்த மாதம் போடப்பட்டது. இதில், தரமற்ற பணிகளால், ஒரே மாதத்தில் தார்ச்சாலை, பிதுங்கி சேதமாகி உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிய-டைந்து வருகின்றனர். சாலை பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சரிவர கவனிக்காதது தான், இதுபோன்ற தரமற்ற பணிகளுக்கு காரணம் என வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு தெரி-விக்கின்றனர். எனவே, விலகிய சாலையை சீரமைக்க நடவ-டிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

