ADDED : செப் 05, 2011 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி : தர்மபுரி அருகே, இறந்த முதியவரின் கண்கள், தர்மபுரி அரிமா சங்கத்துக்கு தானமாக வழங்கப்பட்டது.
தர்மபுரி அடுத்த பண்ணந்தூரை சேர்ந்த ஜெயராமனுடைய தந்தை நடராஜன் (87), இறந்ததையடுத்து, அவரது விருப்பப்படி கண்களை தானம் தர முடிவு செய்து, தர்மபுரி அரிமா சங்கத்தை தொடர்பு கொண்டனர்.
அரிமா டாக்டர் பினு மற்றும் மூர்த்தி ஆகியோர் நடராஜனின் வீட்டுக்கு சென்று அவரது கண்களை தானமாக பெற்றனர். தானமாக பெற்ற கண்கள், உடனடியாக பெங்களூரு அரிமா சங்க கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுவரை, 209 பேரின் கண்கள் தானமாக பெறப்பட்டுள்ளதாக, தர்மபுரி கண்தானம் மைய நிர்வாகிகள் தெரிவித்தனர்.