/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தீபாஞ்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
/
தீபாஞ்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : டிச 17, 2024 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்கோடு, டிச. 17-
தர்மபுரி, பாலக்கோடு தீப்பாஞ்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 14ல், கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நாளான நேற்று காலை யாக சாலையிலிருந்து புனித நீர் கலசம் பிரகார வலம் எடுத்து சென்று, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம்
நடந்தது. பின், தீபாஞ்சியம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் நடந்தது. விழா ஏற்பாடுகளை ஊர்மக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

