ADDED : அக் 10, 2025 01:28 AM
அரூர், மொரப்பூர் பிரிவு வனவர் விவேகானந்தன் தலைமையில் வனத்துறையினர், நேற்று காலை மொரப்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வாதாப்பட்டி பிரிவு, செல்லம்பட்டி பீட், கரடி தடம் வழிச்சாரகம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கள்ள நாட்டுத்துப்பாக்கியுடன் மான் வேட்டையாட முயன்ற ஒருவரை பிடித்து, வனத்துறையினர் விசாரித்தனர்.
அதில், அவர் கெளாப்பாறையை சேர்ந்த ராமன், 58, என்பது தெரிந்தது. மேலும் அதே வனப்பகுதியில் கம்பி வலை மூலம், மான் வேட்டையாட முயன்ற கெளாப்பாறையை சேர்ந்த ஏழுமலை, 31, என்பவரையும் பிடித்தனர்.
இருவருடமிருந்து, ஒரு நாட்டுத்துப்பாக்கி, பைக் எக்ஸ்லேட்டர் ஒயர் கம்பி கள் பறிமுதல் செய்து, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் முன், ஆஜர்படுத்தினர். அவர், ராமன், ஏழுமலை ஆகியோருக்கு, தலா ஒன்றரை லட்சம் ரூபாய் வீதம், மொத்தம், 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.