/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தண்ணீர் தேடி வந்த மான்கள்: நாய்கள் கடித்து உயிரிழப்பு
/
தண்ணீர் தேடி வந்த மான்கள்: நாய்கள் கடித்து உயிரிழப்பு
தண்ணீர் தேடி வந்த மான்கள்: நாய்கள் கடித்து உயிரிழப்பு
தண்ணீர் தேடி வந்த மான்கள்: நாய்கள் கடித்து உயிரிழப்பு
ADDED : மார் 27, 2024 04:12 PM
பாப்பிரெட்டிப்பட்டி: பொம்மிடி, கவரமலை காட்டு பகுதியில், ஏராளமான மான்கள் உள்ளன. கடும் வறட்சி காரணமாக காப்பு காட்டில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும், தற்போது தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால், வன விலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தண்ணீர் தேடி நேற்று காலை கவரமலை பகுதியில் இருந்து, ஒன்றரை வயதுள்ள பெண் மான் மெனசி விழுதிப்பட்டி சாலையில், ஈஸ்வரன் விவசாய நிலத்திற்கு வந்தது. இதை, பார்த்த நாய்கள் துரத்தி கடித்ததில் அந்த மான் உயிரிழந்தது. இதே போன்று தாளநத்தம் - பொம்மிடி ரோட்டில் பில்ப்பருத்தி காட்டிலிருந்து தண்ணீர் தேடி வந்த, 2 வயதுடைய ஆண் மான் விவசாயி கோபி நிலத்திற்கு வரும் போது நாய்கள் கடிதத்தில் உயிரிழந்தது.
மொரப்பூர் வனச்சரக அலுவலர் ஆனந்தகுமார் உத்தரவின்படி, பொம்மிடி வனவர் செந்தில்குமார் உள்ளிட்ட வனத்துறையினர், இறந்த மான்களை மீட்டு பொம்மிடி கால்நடை மருத்துவமனையில் டாக்டர் ரவி மூலம் பிரேத பரிசோதனை செய்தனர். பின் அவைகளை காப்புக்காட்டில் புதைத்தனர். மேலும் பொம்மிடி பஸ் ஸ்டாண்ட் அருகே, தண்ணீர் தேடி வந்த மற்றொரு மானை வனத்துறையினர் உயிருடன் மீட்டு, முருகன் கோவில் மலை பகுதியில்
விட்டனர்.

