ADDED : நவ 25, 2026 06:25 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி; பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பி.பள்ளிப்பட்டி ஜங்காலஹள்ளியை சேர்ந்தவர் அம்பேத்கர். இவருக்கு தோட்டத்தில், 70 அடி ஆழ விவசாய கிணறு உள்ளது.
நேற்று காலை வனப்பகுதியில் இருந்து, இரை தேடி வந்த, 2 வயது ஆண்மான் கிணற்றில் தவறி விழுந்தது. கிணற்றில், 5 அடி தண்ணீர் இருந்ததால், சிறு காயங்களுடன் புள்ளிமான் உயிருக்கு போராடி தத்தளித்தது. பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்புத்துறை வீரர்கள் மானை உயிருடன் பத்திரமாக மீட்டு, வனவர் சுருதி, வனகாப்பாளர் கவரப்பனிடம் ஒப்படைத்தனர். மானின் காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, அருகிலுள்ள ஜங்காலஹள்ளி வனப்பகுதியில் மான் விடப்பட்டது.
