ADDED : நவ 25, 2026 06:24 AM
அ நிறம் | அளவு
கம்பைநல்லுார்; தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுாரில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில், சந்தை நடக்கிறது. டவுன் பஞ்., சார்பில், சந்தைக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில் கடை வைக்காமல், சாலையை ஆக்கிரமித்து, நடைபாதைகளில் தள்ளுவண்டி கடைகள், காய்கறி கடைகள் என, சிறு வியாபாரிகள் பலர் ஆக்கிரமித்து கொள்வதால், அரூர் - கிருஷ்ணகிரி சாலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்படுவதுடன், பொதுமக்களும், இருசக்கர வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே, போக்குவரத்து நெரிசலை குறைக்க, சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
