/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பொம்மிடி ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் ரயில்களை நிறுத்தி செல்ல கருத்து கேட்பு கூட்டத்தில் வலியுறுத்தல்

ADDED : நவ 01, 2025 12:57 AM
பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி ரயில்வே ஸ்டேஷன், 16 கோடி ரூபாயில், அம்ரித் பாரத் திட்டம் மூலம் மேம்படுத்தப்பட்டது. இதன் துவக்க விழா விரைவில் நடக்க உள்ளது.
விழா நடப்பதற்கு முன், கூடுதல் ரயில்களை நிறுத்தி செல்ல வேண்டும் என, ரயில் பயணிகள் சங்கம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.
அவ்வாறு நிறுத்தவில்லை எனில், அம்ரித் பாரத் திட்ட தொடக்க விழாவை பொம்மிடி பகுதி மக்கள் புறக்கணித்து, அன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
இதையடுத்து நேற்று, ரயில் பயணிகள் மற்றும் சங்கத்தினரிடம், சேலம் ரயில்வே கோட்ட முதன்மை வணிக மேலாளர் வாசுதேவன், உதவி வணிக மேலாளர் சரவணன், ரயில்வே பாதுகாப்பு படை ரித்தீஷ் பாபு, கோட்ட பொறியாளர் சபரீஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பொம்மிடி ரயில்வே ஸ்டேஷனில் கருத்து கேட்டனர்.
இதில் கோவை, திருவனந்தபுரம், நாகர்கோவில், விவேக், கொச்சி வேலி, ஆகிய எக்ஸ்பிரஸ்கள் ரயில்களை நிறுத்த வலியுறுத்தப்பட்டன. அரக்கோணம் - சேலம் - மெமு எக்ஸ்பிரஸ் வாரத்தில், 7 நாட்களும் இயக்க வேண்டும். ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.
பிரமாண்ட தேசியக்கொடி நிறுவப்பட வேண்டும். நடைமேடை, 2ல் கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதில் தென்னக ரயில்வே உறுப்பினர் சிவசுப்பிரமணியன், ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் ஜெபசிங், அறிவழகன், சங்கீதா முனிரத்தனம், காமராஜ், வணிகர் சங்க நிர்வாகிகள், ரயில் பயணிகள், அரசியல் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.