/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரூ.4.56 கோடியில் தார்ச்சாலை பணிகளுக்கு பூஜை
/
ரூ.4.56 கோடியில் தார்ச்சாலை பணிகளுக்கு பூஜை
ADDED : நவ 01, 2025 12:57 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பெலத்துார் ஆர்ச் அருகே மாலுார் சாலையிலிருந்து, சிங்கசாதனப்பள்ளி வரை, 4.09 கோடி ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்க, நபார்டு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 55.78 லட்சம் ரூபாய் மதிப்பில், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், பெலத்துார் முதல் தாளப்பள்ளி வழியாக கர்நாடக மாநில எல்லை வரை, தார்ச்சாலை அமைக்கவும் நிதி வழங்கப்பட்டுள்ளது.
இப்பணிகளை, ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் கஜேந்திரமூர்த்தி, லோகேஷ்ரெட்டி, மாவட்ட ஆதிதிராவிடர் அணி தலைவர் முனிராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

