sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சென்னியம்மன் கோவிலில் அடிப்படை வசதிக்கு கோரிக்கை

/

சென்னியம்மன் கோவிலில் அடிப்படை வசதிக்கு கோரிக்கை

சென்னியம்மன் கோவிலில் அடிப்படை வசதிக்கு கோரிக்கை

சென்னியம்மன் கோவிலில் அடிப்படை வசதிக்கு கோரிக்கை


ADDED : ஜூலை 15, 2024 12:16 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் அடுத்த, டி.அம்மாபேட்டையிலுள்ள சென்னியம்மன் கோவிலில், அடிப்படை வசதிகள் செய்து தர, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த டி.அம்மாபேட்டையில், தென்-பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் சென்னியம்மன் கோவில் உள்ளது.

தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய, 3 மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு, ஆடி மாதம் பிறந்தவுடன் தினமும், ஏராளமான பக்தர்கள் வந்து செல்-கின்றனர். குறிப்பாக, ஆடிப்பெருக்கு விழாவில் இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 20,000க்கும் மேற்பட்ட, பக்தர்கள் வந்து, தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். ஆற்றிலுள்ள பாறைகளுக்கு மஞ்சள், குங்கும-மிட்டு, பொரி துாவி, பூஜை செய்து வழிபாடு நடத்தி விட்டு, ஆடு, கோழிகளை பலியிடுகின்றனர். குடிநீர், கழிப்பறை உள்-ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிப்படுவது தொடர்கதையாக உள்ளது. இங்கு பலியிடப்படும் ஆடு, கோழிகளின் இறைச்சி கழிவுகளை அகற்றப்படாததால், துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே, வரும் ஆடிப்பெருக்கு விழாவுக்கு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட, அடிப்-படை வசதிகளை செய்து தர, வேடகட்டமடுவு பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us