தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ குடிநீர் வழங்க கோரிக்கை

குடிநீர் வழங்க கோரிக்கை

குடிநீர் வழங்க கோரிக்கை


ADDED : ஆக 30, 2026 03:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2026 03:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: அரூர் நகராட்சிக்கு உட்பட்ட, 9வது வார்டு முருகர்கோவில் தெருவில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள பல குடியிருப்புகளுக்கு முறையாக குடிநீர் வினி-யோகம் செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் கூறு-கின்றனர்.

இது குறித்து, அவர்கள் கூறியதாவது:

கடந்த, 19 நாட்களுக்கு மேலாக, முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகிறோம். இதனால், தண்ணீரை விலை கொடுத்து வாங்கி வருகிறோம். குடிநீர் வழங்கக்கோரி நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, எங்கள் குடியி-ருப்பு பகுதிகளுக்கு, குடிநீர் வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us