தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ காட்டுப்பன்றிகளால் விளைநிலத்தில் பயிர் சேதம்

காட்டுப்பன்றிகளால் விளைநிலத்தில் பயிர் சேதம்

காட்டுப்பன்றிகளால் விளைநிலத்தில் பயிர் சேதம்


ADDED : ஆக 30, 2026 03:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2026 03:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரூர்: அரூர் அடுத்த சித்தேரி மலை, கீழானுார், செல்லம்பட்டி, கீரைப்பட்டி, ஒடசல்பட்டி, கூக்கடப்பட்டி, வாச்சாத்தி, தாமலே-ரிப்பட்டி, கீழ்மொரப்பூர், மருதிப்பட்டி, கூச்சனுார், கல்லடிப்-பட்டி, எம்.வெளாம்பட்டி பகுதிகளில் நெல், தக்காளி, பயறு வகைகள், சிறு தானியங்கள், மரவள்ளிகிழங்கு உள்ளிட்டவைகள் சாகுபடி செய்யப்படுகிறது. விளைநிலங்களை ஒட்டி உள்ள வனப்பகுதியில் காட்டுப்பன்றிகள் அதிகம் உள்ளது. இரவில் கூட்-டமாக வரும் அவை விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்-படுத்துகிறது. அவற்றை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து, அவர்கள் கூறியதாவது: காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வனத்

துறையின் நடவடிக்கை இல்லை. விவசாயிகள் நடவடிக்கை மேற்கொண்டால் வனத்துறையினர் வழக்கு போடுகின்றனர். பல ஆயிரம் செலவு செய்த விளைநிலங்களில், பயிர்களை சேதப்ப-டுத்துவதால், விவசாயிகள் பாதிப்படைகின்றனர். சேதப்படுத்-தப்பட்ட பயிர்கள் குறித்து, வனத்துறையில் முறையாக புகார் மனு அளித்தாலும், இழப்பீடு வழங்குவதில்லை.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us