/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பயணிகள் நிழற்கூடம் இடிப்பு: மக்கள் மறியல்
/
பயணிகள் நிழற்கூடம் இடிப்பு: மக்கள் மறியல்
ADDED : நவ 09, 2025 03:55 AM
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், கடத்துார் அடுத்த மணியம்பாடி பஸ் நிறுத்-தத்தில் கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன்பு நிழற்கூடம் கட்டப்பட்-டது. நல்ல நிலையில் இருந்த அதை சேதமானதாக, பி.டி.ஓ., உத்-தரவின் படி நேற்று முன்தினம் மாலை பஞ்., நிர்வாகம் இடித்து அகற்றியது.
இதை கண்டித்து மாஜி பஞ்., தலைவர்கள் அசோகன், மஞ்சளா, தமிழ்வேந்தன் உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள், கடத்துார் --- தர்மபுரி சாலையில் நேற்று முன்தினம் இரவு மறி-யலில் ஈடுபட்டனர். அவர்களிடம், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், 4 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய நிழற் கூடம் கட்டவே இடிக்கப்பட்டது என தெரி-வித்தனர்.
மேலும், கடத்துார் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சு-வார்த்தை நடத்தியபின் கிராம மக்கள் மறியலை கைவிட்டனர். தொடர்ந்து நேற்று காலை, 10:00 மணியளவில் சாலை மறியல் செய்ய, மக்கள் ஒன்று கூடினர். அவர்களிடம் பி.டி.ஓ., செல்வன் நடத்திய பேச்சுவார்த்தையில் மறியல் கைவிடப்பட்டது.
இது குறித்து, பொதுமக்கள் கூறியதாவது: மணியம்பாடியில் நிழற்கூடத்திற்கு பின்னால் உள்ள, 1.5 ஏக்கர் நிலம் ரியல் எஸ்டேட் வியாபாரத்திற்காக பிளாட் போடப்படுகிறது. அதற்கு இந்த நிழற்கூடம் இடையூறாக உள்ளதால், அதிகாரிகள் மூலமாக, இடித்து அகற்றி விட்டனர். அதே இடத்தில் நிழற்கூடம் கட்ட வேண்டும். தள்ளி கட்ட அனுமதிக்க மாட்டோம் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இந்நிலையில், சாலை மறியலில் ஈடுபட்ட, 50 பேர் மீது, கடத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

