/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நலம் காக்கும் ஸ்டாலின் நரிப்பள்ளியில் முகாம்
/
நலம் காக்கும் ஸ்டாலின் நரிப்பள்ளியில் முகாம்
ADDED : நவ 09, 2025 03:56 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த நரிப்பள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடந்தது.
மாவட்ட சுகாதார அலுவலர் ராஜேந்திரன், அரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரமோகன் ஆகியோர் மருத்துவ முகாமை துவக்கி வைத்தனர். இதில், பொதுமக்களுக்கு புற்று நோய் கண்டறிதல், ரத்த பரி-சோதனை, இ.சி.ஜி., சளி பரிசோதனை, பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, இதய மருத்துவம், எலும்பியல், நரம்-பியல் மருத்துவம், தோல் மருத்துவம், காது மூக்கு தொண்டை, மகப்பேறு, இயன்முறை, கண் மருத்துவம், குழந்தைகள் நலம், நுரையீரல் மருத்துவம், நீரிழிவு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் உள்-ளிட்டவைகள் வழங்கப்பட்டது. முகாமில், வட்டார மருத்துவ அலுவலர் அழகேசன் மற்றும் சுகாதாரத்துறையினர் கலந்து கொண்டனர்.

