/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்
/
ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்
ADDED : டிச 12, 2024 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்
பாப்பிரெட்டிப்பட்டி, டிச. 12---
பொம்மிடி அடுத்த பையர்நத்தம், கதிரிபுரத்தை சேர்ந்தவர் முனுசாமி, 29. இவர், கதிரிபுரம் கிராமத்தில் நத்தம் புறம்போக்கு இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தார். இதையடுத்து நேற்று கலெக்டர் சாந்தி உத்தரவின் படி பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் வள்ளி தலைமையில் வருவாய் துறையினர் கதிரிபுரத்தில் நத்தம் புறம்போக்கு இடத்தில், நில அளவை செய்தனர். பின் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீடுகளை இடித்து அகற்றினர். இதில் துணை தாசில்தார் சக்திவேல், ஆர்.ஐ.,விமல், வி.ஏ.ஓ., இளங்கோவன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

