/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 05, 2024 10:41 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் அலுவலகம் முன், 18 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் முகமது இலியாஸ், தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் தர்மன், மாவட்ட பொருளாளர் வினோத்குமார், ஒருங்கிணைப்பாளர் இளங்குமரன், மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர், பஞ்., செயலாளர்களின் ஒருங்கிணைப்பாளர் சர்க்கரைவேல் ஆகியோர், கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
இதில், அனைத்து நிலை காலிப்பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும். அவுட்சோர்சிங் நியமன நடைமுறையை கைவிட்டு, பஞ்., செயலாளர்களுக்கு சிறப்பு நிலை தேர்வு நிலை ஊதியம், மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு, ஈட்டா விடுப்பு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை உள்ளிட்ட, விடுப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் உடனே வழங்க வேண்டும். இணை இயக்குனர், உதவி இயக்குனர், உதவிப்பொறியாளர் மற்றும் ஒன்றிய பொறியாளர் பதவி உயர்வுகளை உடனே வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.