/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
/
ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 28, 2024 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை, ஊரக வீடுகள் பழுது நீக்கும் திட்டம், கலைஞர் கனவு இல்லம் ஆகியவற்றிற்கு உரிய ஊழியர் கட்டமைப்பு பணியிடங்கள் வழங்க கோரியும், வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட கோரியும், போதிய கால அவகாசம் வழங்கக்கோரி, ஊத்தங்கரையில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், ஊத்தங்கரை பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
ஊரக வளரச்சி துறை அலுவலர்கள் சங்க வட்ட தலைவர் சம்பத் தலைமை வகித்தார். மகளிர் ஒருங்கிணைப்பாளர் காந்திமதி, அரசு ஊழியர் சங்க, மாவட்ட பொருளாளர் நந்தகுமார், கருணாகரன் மற்றும் அலுவலர்கள் பலர் பேசினர்.