/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்
/
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 02, 2024 01:51 AM
பழைய ஓய்வூதிய திட்டத்தை
அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்
தர்மபுரி, அக். 2-
உலக ஓய்வூதியர் தினத்தையொட்டி, மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், தர்மபுரி
பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒருங்கிணைப்பு குழு மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் சோமசுந்தரம், ஓய்வுபெற்ற தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர் சங்க, மாவட்ட தலைவர் பழனிசாமி உட்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில், அண்மையில் மத்திய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, அனைவருக்கும் பயனளிக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பி.எப்.ஆர்.டி.ஏ., சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உத்தரவாத படுத்த வேண்டும். லோக்சபா நிலைக்குழு பரிந்துரைகளை ஏற்று, 65, 70, 75, 80 வயதானவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தினர்.