/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஊரக வேலை உறுதியளிப்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
ஊரக வேலை உறுதியளிப்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 09, 2025 01:21 AM
ஊரக வேலை உறுதியளிப்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி : தர்மபுரி மாவட்ட தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு சட்ட தொழிலாளர் சங்கம் சார்பில், தர்மபுரி டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க ஒருங்கிணைப்பாளர் பிரதாபன் தலைமை வகித்தார். இதில், மத்திய நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ள, 4.50 லட்சம் கோடி ரூபாயை தேசிய ஊரக வேலை வாய்ப்பு தொழிலாளர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆண்டுக்கு, 200 நாள் வேலை தின ஊதியம், 700 ரூபாய் வழங்க வேண்டும். தினப்பணி செய்யும் பணியாளர்களுக்கு கடந்த, 3 மாதங்களாக வழங்காத மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். 100 நாள் பணி முடித்த பணி தள பொறுப்பாளர்களை தேசிய பாதுகாப்பு சட்டப்படி பணி மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.

