ADDED : அக் 30, 2026 01:56 AM
அ நிறம் | அளவு
தர்மபுரி: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் துரைவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சிவன், சேதுலிங்கம், ரமேஷ், சிவக்குமார், பிரபாவதி ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில், 2026 தமிழக சட்டசபை தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அனைத்து நிலை அலுவலர்களுக்கும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக மதிப்பூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மாவட்ட பொருளாளர் பகவதி நன்றி கூறினார்.
