ADDED : அக் 30, 2026 01:55 AM
அ நிறம் | அளவு
அரூர்: தர்மபுரி மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், 2026 - 2027ம் ஆண்டிற்கான 'இளையோர் இலக்கிய பயிற்சிப் பாசறை' நிகழ்ச்சி, அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தது.
தர்மபுரி மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் ராஜா வரவேற்றார். கல்லூரி முதல்வர் மங்கையர்க்கரசி தலைமை வகித்து பேசினார். அரூர் ஆர்.டி.ஓ., செம்மலை பேசுகையில், ''சங்க இலக்கியங்கள் போதிக்கும் வாழ்வியல் விழுமியங்கள், தமிழர்களின் அறநெறி மரபு மற்றும் நவீன டிஜிட்டல் உலகில் தமிழ் மொழியின் முக்கியத்துவம் மற்றும் மாணவ, மாணவியர் இலக்கிய வாசிப்பை அன்றாடப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்,'' என்றார்.
