ADDED : அக் 05, 2024 05:56 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பொ.மல்லாபுரம் அரசு பள்ளி, நத்தமேடு அரசு மேல்நிலைப்பள்ளி இணைந்து, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் கடந்த, 28ல் தொடங்கி நேற்று வரை நடந்தது.
தலைமையாசிரியர் பாலமுருகன் தலைமை வகித்தார். பி.டி.ஏ., தலைவர் கவுதமன், பொருளாளர் கோகுல்நாத், பேரூராட்சி தலைவர் சாந்தி புஷ்பராஜ், எஸ்.எம்.சி., கல்வியாளர் நேதாஜி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் உதவி தலைமை ஆசிரியர் தமிழ்த்தென்றல் வரவேற்றார். தொடர்ந்து கோவில் துாய்மை செய்தல், சாலை சீரமைத்தல், மழைநீர் சேகரிப்பு, போதை விழிப்புணர்வு பேரணி, பள்ளி வளாகம் துாய்மை செய்தல், நிலவேம்பு கசாயம் வழங்குதல், டெங்கு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தலைமை ஆசிரியர்கள் மணி, பாரதி, சேகர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சிவக்குமார், நத்தமேடு பள்ளி உதவி திட்ட அலுவலர் கார்த்திக் உட்பட் பலர் பங்கேற்றனர்.