UPDATED : அக் 04, 2026 04:59 AM
ADDED : அக் 04, 2026 03:41 AM

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் கடத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், கடத்துார் பேரூராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி, வட்டார மருத்துவ அலுவலர் அரசு ஆலோசனைபடி, டாக்டர் கனல் வேந்தன் தலைமையில் நடந்-தது.
இப்பேரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கி பஸ் ஸ்டாண்ட், தர்மபுரி ரோடு, அரூர் ரோடு உள்ளிட்ட பேரூ-ராட்சியிலுள்ள பல்வேறு பகுதிகளில பேரணியாக சென்று, பரு-வநிலை மாற்றத்தால் ஏற்படும் டெங்கு காய்ச்சல் பாதிப்புகளை தடுக்கும் வகையில், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்க-ளுக்கு டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பது குறித்து எடுத்துரைக்-கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட இளநிலை பூச்சியியல் வல்லுனர் சண்-முகம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுதாகர், கடத்துார் மற்றும் மொரப்பூர் வட்டாரத்தைச் சேர்ந்த டெங்கு கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு ஆய்வா-ளர்கள் கலந்து கொண்டனர்.
