ADDED : செப் 20, 2026 03:06 AM

அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பி.பள்ளிப்பட்டி ஊராட்சி வாசி-கவுண்டனுார், ஜங்காலஹள்ளி, லுார்துபுரம், பி.பள்ளிப்பட்டி பகு-திகளில் டெங்கு காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து பாப்பிரெட்டிப்பட்டி பி.டி.ஓ., அறிவழகன் உத்தரவு படி பாப்பிரெட்டிப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கவுரிசங்கர் மேற்பார்வையில், ஊராட்சி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, வட்டார சுகாதார மேற்பார்-வையாளர் முரளி, சுகாதார ஆய்வாளர் நவநீதம் உள்ளிட்ட அலுவ-லர்கள் வீடு வீடாக கொசு மருந்து அடித்தும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும், டெங்கு வராமல் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து காய்ச்சல் வருபவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டது.
