ADDED : செப் 20, 2026 03:05 AM

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த பேதாதம்பட்டியை சேர்ந்-தவர் தங்கராஜ், 65. இவர், கடந்தாண்டு, கோபிநாதம்பட்டி கூட்-ரோட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, பேதாதம்பட்டியை சேர்ந்த மற்றொரு தங்கராஜ், 58, என்பவர் ஓட்டி வந்த டூவீலர் மோதியதில் உயிரிழந்தார். இது குறித்து கோபிநாதம்பட்டி போலீசில் வழக்குப்பதிந்து பாப்பிரெட்டிப்பட்டி நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் உயிரிழந்த தங்க-ராஜின் மகன்கள் துரை, 40, முருகன், 39, ஆகிய இருவரும், விபத்தை ஏற்படுத்திய தங்கராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரை கடந்த ஓராண்டாக தகாத வார்த்தையால் திட்டியும், தகராறு செய்தும் வந்தனர்.
கடந்த, 17ம் தேதி மாலை, 6:00 மணிக்கு துரை, 'என் தந்தை மீது டூவீலரை மோதி சாகடித்து விட்டாய்' எனக்கூறி தங்கராஜை தாக்கி உள்ளார். இது குறித்து அவரது மகன் பிரேம்குமார், 32, என்பவர் நேற்று முன்தினம் கோபிநாதம்பட்டி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, இருதரப்பினரையும் விசாரணைக்கு வருமாறு போலீசார் அழைத்தனர். போலீஸ் ஸ்டேஷன் அருகே நின்றிருந்த பிரேம்குமாரை, துரை மற்றும் முருகன் ஆகிய இரு-வரும் எங்கள் மீது புகார் கொடுப்பாயா எனக்கேட்டு தகாத வார்த்-தையால் திட்டி தாக்கியுள்ளனர். இது குறித்து பிரேம்குமார் புகார் படி, போலீசார், துரை மற்றும் முருகன் ஆகிய இருவரை கைது செய்தனர்.
