தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ வளர்ச்சி அடைந்த பாரதம் வேலை திட்ட பயிற்சி

வளர்ச்சி அடைந்த பாரதம் வேலை திட்ட பயிற்சி

வளர்ச்சி அடைந்த பாரதம் வேலை திட்ட பயிற்சி


ADDED : ஜூலை 02, 2026 01:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2026 01:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி அடைந்த பாரதம் கிராம வேலை உறுதி திட்டம் நேற்று முதல் செயல்படுத்தப்ப-டுகிறது. இதற்கான பயிற்சி கடத்துார் ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ., கலைச்செல்வி தலைமையில் நடந்தது. இதில், துணை பி.டி.ஓ.,க்கள் வேடியப்பன், பாரதி, மகாலட்சுமி, வீரபத்திரன், பணி மேற்பார்வையாளர் அன்னபூரணி, உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோன்று பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் இத்திட்டம் குறித்து பி.டி.ஓ., அறிவழகன் தலைமையில், பி.டி.ஓ., அபுல் கலாம் ஆசாத் முன்னிலையில், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.இந்த விழிப்புணர்வு பேரணி ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கி அண்ணா நகர், செங்கல்பட்டி, உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழி-யாக மீண்டும் ஒன்றிய அலுவலகத்தை வந்தடைந்தது. இதில் துணை பி.டி.ஓ.,க்கள், இளைய ராஜா ராஜா, உமா, ரங்கநாதன், சுதாகர், ஊராட்சி செயலர் கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பெண் சாவில் சந்தேகம்: உறவினர்கள் சாலை மறியல்

அரூர், ஜூலை 2

மொரப்பூர் அடுத்த தம்பிசெட்டிப்பட்டியை சேர்ந்தவர் சாந்த-குமார், 44, லாரி டிரைவர்; இவரது மனைவி அம்பிகா, 35, தம்ப-திக்கு தனுசியா, 16, மித்ரன், 13, என்ற மகள், மகன் உள்ளனர். சாந்தகுமாரின் அக்கா கயல்விழி தனக்கு சொந்தமான மாடுகளை சாந்தகுமாருக்கு சொந்தமான இடத்தில் கட்டி

வந்துள்ளார். இதனால் கயல்விழிக்கும், அம்பிகாவிற்கும் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது.

இது குறித்து கடந்த, 29ல் சாந்தகுமாரிடம் அம்பிகா கூறியுள்ளார். இதனால் தம்பதிக்குள் பிரச்னை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்-தினம் இரவு, 7:15 மணிக்கு அம்பிகா வீட்டில் இருந்த பூச்சிக் கொல்லி மருந்தை குடித்துள்ளார். அவரை, சாந்தகுமார் மற்றும் அக்கம், பக்கத்தினர், மொரப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்-திற்கு கொண்டு சென்றனர். பின், அங்கிருந்து, 108 ஆம்புலன்சில் அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அம்-பிகா உயிரிழந்தார்.

இந்நிலையில் அம்பிகாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை கணவர் சாந்தகுமார், அவரது அக்கா கயல்விழி, கணவர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் அடித்து கொலை செய்து விட்டதா-கவும், அவர்கள் மூவரையும் கைது செய்யக்கோரி, அம்பிகாவின் உறவினர்கள், நேற்று மதியம், 1:00 மணிக்கு, அரூர் - தர்மபுரி சாலையில், அரூர் அரசு மருத்துவமனை எதிரில் சாலைமறியலில்

ஈடுபட்டனர்.

அவர்களிடம் அரூர் டி.எஸ்.பி., சதீஸ்குமார் பேச்சுவார்த்தை நடத்-தினார். அப்போது உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்-கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட-வர்கள், 2:00 மணிக்கு கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us