ADDED : ஜூலை 02, 2026 01:49 AM
அ நிறம் | அளவு
தர்மபுரி: 'நீட்' தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநா-யக மாதர் சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில், தர்மபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க மாவட்ட தலைவர் குறலரசன் தலைமை வகித்தார். நீட் தேர்வை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு-றுத்தினர்.
